Skip to main content

Posts

Showing posts from June, 2008

சின்ன கதை

தூங்கி கொண்டு இருந்த சசிக்கு எழுந்தவுடன் தான் கண்டது கனவா இல்லை நிஜமாகவே நடந்ததா என்று குழப்பமாக இருந்தது. நேற்று நடந்தது அவளை மிகவும் கவலை கொள்ள செய்தது கவலை என்பதை விட மிகவும் குழப்பமாக இருந்தது சசிக்கு. அவளுக்கு அந்த நிகழ்வுகள் நன்றாக நினைவில் இருந்தது. யாரோ ஒரு பாட்டி அவளிடம் வந்து அடுத்த வாரம் அவள் செல்லவிருக்கும் டெல்லி பயணத்தை ரத்து செய்துவிடும்படி மறு படி மறு படி கெஞ்சி கேட்ட படி இருந்தாள். அவள் டெல்லி பயணத்தை ரத்து செய்யா விட்டால் அந்த பாட்டி இறந்து விடுவாள் என்றும் சொன்னாள். அந்த பாட்டியின் முகம் அவளுக்கு மிகவும் வேண்டிய ஒருவரின் முகம் போலவே தோன்றியது. கடந்த ஒரு வாரமாக அந்த கனவு அவளை பாடாய் படுத்தி வைத்தது. சரியாக விடியும் நேரம் அந்த கனவு வரும் கனவில் அவளுக்கு நேரில் ஒரு பாட்டிஉடன் பேசுவது போல இருக்கும் அந்த பாட்டி அவளிடம் டெல்லிக்கு போகதே என்னை காப்பாத்து என்று திரும்ப திரும்ப சொல்லி கொண்டே இருப்பாள் அந்த பாட்டி அவளின் நெற்றியை காட்டி ஏதோ சொல்ல சொல்ல வரும் போது அவளுக்கு தூக்கம் களைந்துவிடும் இது கடந்த ஒரு வரமாகவே நடந்து வருகிறது.சசி டெல்லிக்கு போகலாமா வேண்டாமா என்று பயங்கர ...

புரியாத மௌனம்

எனக்கும் பாட்டிக்கும்மான உறவு மிகவும் சிறிது காலம் தான். நான் கல்லூரி இறுதி வருடம் படிக்கும் போது பாட்டி இறந்து போன செய்தியை சொல்லி என்னை வீட்டுக்கு கூப்பிட்டு போக அப்பா வந்து இருந்தார். வீட்டுக்கு சென்று விட்டு அங்கு இருந்து ஊருக்கு செல்ல வேண்டும் என்று நான் நினைத்தேன். அப்பாவுடன் வண்டியில் நாற்பது நிமிடம் பயணம் செய்ய வேண்டும் எங்கள் வீட்டை அடைய அப்பா பாட்டி இறந்து விட்டாள் என்பதை தவிர வேற ஒன்ன்றும் என்னிடம் சொல்ல வில்லை எனக்கும் அப்பாவிடம் என்ன கேட்பது என்று புரிய வில்லை. எப்படி திடீர் என்று இப்படி என்பதே எனக்கு கேள்வியாக இருந்தது அப்பாவுக்கும் அப்படி தான் இருந்து இருக்கும் என்று நான் நினைத்து கொண்டேன். அதற்கு முன்பு அப்பாவை நான் அப்படி ஒரு ஆழ்ந்த மௌனத்தில் பார்த்தது இல்லை. வீட்டிற்கு சென்றதும் அம்மா எல்லாத்தையும் எடுத்து வைத்து கிளம்ப தயாராக இருப்பது புரிந்தது. எனக்கும் சேர்த்து எல்லாத்தையும் எடுத்து வைத்து விட்டதாக சொன்னாள். எல்லாரும் கிளம்பி ஊருக்கு சென்றோம் பயணத்தில் கூட நான் ஒன்றும் கேட்க வில்லை அம்மாவாகவே பாட்டிக்கு திடிர்னு முடியாம போய் இறந்துடாங்க என்று சொன்னாள். ஊருக்கு சென்...