Skip to main content

புரியாத மௌனம்

எனக்கும் பாட்டிக்கும்மான உறவு மிகவும் சிறிது காலம் தான்.

நான் கல்லூரி இறுதி வருடம் படிக்கும் போது பாட்டி இறந்து போன செய்தியை சொல்லி என்னை வீட்டுக்கு கூப்பிட்டு போக அப்பா வந்து இருந்தார். வீட்டுக்கு சென்று விட்டு அங்கு இருந்து ஊருக்கு செல்ல வேண்டும் என்று நான் நினைத்தேன். அப்பாவுடன் வண்டியில் நாற்பது நிமிடம் பயணம் செய்ய வேண்டும் எங்கள் வீட்டை அடைய அப்பா பாட்டி இறந்து விட்டாள் என்பதை தவிர வேற ஒன்ன்றும் என்னிடம் சொல்ல வில்லை எனக்கும் அப்பாவிடம் என்ன கேட்பது என்று புரிய வில்லை. எப்படி திடீர் என்று இப்படி என்பதே எனக்கு கேள்வியாக இருந்தது அப்பாவுக்கும் அப்படி தான் இருந்து இருக்கும் என்று நான் நினைத்து கொண்டேன். அதற்கு முன்பு அப்பாவை நான் அப்படி ஒரு ஆழ்ந்த மௌனத்தில் பார்த்தது இல்லை. வீட்டிற்கு சென்றதும் அம்மா எல்லாத்தையும் எடுத்து வைத்து கிளம்ப தயாராக இருப்பது புரிந்தது. எனக்கும் சேர்த்து எல்லாத்தையும் எடுத்து வைத்து விட்டதாக சொன்னாள்.

எல்லாரும் கிளம்பி ஊருக்கு சென்றோம் பயணத்தில் கூட நான் ஒன்றும் கேட்க வில்லை அம்மாவாகவே பாட்டிக்கு திடிர்னு முடியாம போய் இறந்துடாங்க என்று சொன்னாள். ஊருக்கு சென்றதும் நான் எதிர் பார்த்தது போலவே பாட்டியை மாலை எல்லாம் போட்டு உட்கார வைத்து இருந்தார்கள் பார்த்தவுடன் எனக்கு மனதில் சொல்ல முடியாத அளவு எதோ ஒரு கவலை அழுகையும் கூடவே சேர்ந்து கொண்டது. அப்பா இன்னும் அவரின் மௌனத்தை விட வில்லை.நிறைய பேர் வந்து அப்பாவை அழுது விட சொன்னார்கள் அப்பா அவரின் மௌனத்தையே எல்லோருக்கும் பதிலாக தந்தார் . எனக்கு அப்பாவை பார்க்க மிகவும் பயமாக இருந்தது. மாலை பாட்டியை அடக்கம் செய்ய கொண்டு செல்லும் வரை அப்பா மௌனமாகவே இருந்தார்.

அப்பாவின் மௌனம் எங்களை மிகவும் கவலை கொள்ள செய்தது. அடக்கம் செய்து விட்டு வீட்டுக்கு வந்த பிறகும் கூட அப்பாவின் மௌனம் தொடர்ந்தது. அன்று இரவு யாருக்கும் சாப்பிட பிடிக்க வில்லை. அப்பாவின் மௌனம் எங்களை மிகவும் பய முறுத்தியது அம்மா அப்பாவிடம் சென்று எதாவது கேட்டால் அப்பா அதற்கு மட்டும் பதில் சொல்லி விட்டு பிறகு மௌனமாகி விடுவார். யார் யாரோ அப்பாவை அழுது விடும் படி கூறினார்கள் அப்பா அவர்களுக்கு மௌனத்தையே பதிலாக தந்தார். அன்று இரவு அப்பா வெகு நேரம் கழித்து இரவு எங்கோ சென்று விட்டு விடியற் காலை தான் வந்ததாக அம்மா காலையில் சொன்னார்.
மறு நாளில் இருந்து அப்பா எப்பவும் போல இருந்தார்.

எனக்கு வாழ்வில் புரியாத பல விசயங்களில் என் அப்பவின் இந்த மௌனமும் ஒன்று

Comments

Popular posts from this blog

A violinist in the Metro.

A man sat at a metro station in Washington DC and started to play the violin; it was a cold January morning. He played six Bach pieces for about 45 minutes. During that time, since it was rush hour, it was calculated that thousands of people went through the station, most of them on their way to work. Three minutes went by and a middle aged man noticed there was musician playing. He slowed his pace and stopped for a few seconds and then hurried up to meet his schedule A minute later, the violinist received his first dollar tip: a woman threw the money in the till and without stopping continued to walk. A few minutes later, someone leaned against the wall to listen to him, but the man looked at his watch and started to walk again clearly he was late for work. The one who paid the most attention was a 3 year old boy. His mother tagged him along, hurried but the kid stopped to look at the violinist. Finally the mother pushed hard and the child continued to walk turning his head all the ti...

Missing

It is Raining outside I wanted you beside me I thought of calling you But something stopped me You used to Say "Do what you feel like doing" Now Should I call you or not? I can see your presence In all my thoughts Always contradicting Between Me and You I am so confused and I am missing you

Renaming PDF bulk by PDF Content

I had a requirement to email 165 certficates to students, but the Certificates are named by Student ID which was very difficult for me to identify since the Student ID was not generated by us, it was generated by a company. So I searched online for bulk rename of PDF files in a folder by reading content of the PDF , I came across this http://www.a-pdf.com/?product-rn site, which does the job in swift! #BulkPDFRename