தூங்கி கொண்டு இருந்த சசிக்கு எழுந்தவுடன் தான் கண்டது கனவா இல்லை நிஜமாகவே நடந்ததா என்று குழப்பமாக இருந்தது.
நேற்று நடந்தது அவளை மிகவும் கவலை கொள்ள செய்தது கவலை என்பதை விட மிகவும் குழப்பமாக இருந்தது சசிக்கு.
அவளுக்கு அந்த நிகழ்வுகள் நன்றாக நினைவில் இருந்தது. யாரோ ஒரு பாட்டி அவளிடம் வந்து அடுத்த வாரம் அவள் செல்லவிருக்கும் டெல்லி பயணத்தை ரத்து செய்துவிடும்படி மறு படி மறு படி கெஞ்சி கேட்ட படி இருந்தாள். அவள் டெல்லி பயணத்தை ரத்து செய்யா விட்டால் அந்த பாட்டி இறந்து விடுவாள் என்றும் சொன்னாள். அந்த பாட்டியின் முகம் அவளுக்கு மிகவும் வேண்டிய ஒருவரின் முகம் போலவே தோன்றியது. கடந்த ஒரு வாரமாக அந்த கனவு அவளை பாடாய் படுத்தி வைத்தது. சரியாக விடியும் நேரம் அந்த கனவு வரும் கனவில் அவளுக்கு நேரில் ஒரு பாட்டிஉடன் பேசுவது போல இருக்கும் அந்த பாட்டி அவளிடம் டெல்லிக்கு போகதே என்னை காப்பாத்து என்று திரும்ப திரும்ப சொல்லி கொண்டே இருப்பாள் அந்த பாட்டி அவளின் நெற்றியை காட்டி ஏதோ சொல்ல சொல்ல வரும் போது அவளுக்கு தூக்கம் களைந்துவிடும் இது கடந்த ஒரு வரமாகவே நடந்து வருகிறது.சசி டெல்லிக்கு போகலாமா வேண்டாமா என்று பயங்கர குழப்பதில் இருந்தாள். அன்று ஆபீஸில் இருந்து வீட்டுக்கு வரும் போது பஸ்சில் அதே போல் ஒரு பாட்டியை அவளுக்கு பார்த்த மாதிரி இருந்தது இப்படி மிகவும் குழப்பதில் இருந்த சசிக்கு அன்று இரவும் அந்த கனவு வந்தது. அந்த கனவில் பாட்டியின் நெற்றியை அவள் கவனித்தாள் அதில் அவள் நெற்றியில் இருப்பது போலவே ஒரு தழும்பு.
பின் குறிப்பு :சில நேரங்களில் என் வாழ்வில் நடக்கும் சில விஷயங்கள் முன்பே நடந்தது போல இருக்கும் அதனால் தான் இந்த கதை
Comments